மறுஜென்மம் இருக்கோ, இல்லையோ, அது நமக்கு தெரியாது. மறுஜென்மம் இருந்து அது ஒருவருக்கு முன்ஜென்மத்தில் தெரியவந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது இந்த கதையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ஊரில் மகான் ஒருவர் இருந்தார். அவர் தன் மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர் நிறைய விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது அவரது மறுபிறவி பற்றி ஆராய ஆரம்பித்தார். முடிவில் அவர் அவரது மறுபிறவியில் பன்றியாக பிறக்க போவதாக கண்டறிந்தார்.
அது அவருக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிறகு அவர் அவரது மகனை அழைத்து நான் மறு பிறவியில் பன்றியாக பிறக்க போகிறேன். என்னால் போயும் போயும் ஒரு பன்றியாக வாழ முடியாது. அதனால் நீ என்னை, அதாவது நான் பன்றியாக பிறந்தவுடன் என்னை உன் கோடாலியால் வெட்டி கொன்று விடு என்றார்.
அவர் சாகும் காலம் நெருங்கியது. அவர் சொன்னது போல் அவரது மகன் சில கர்ப்பமாக இருக்கும் பன்றிகளை வாங்கி வளர்த்து வந்தான். அவர் இறக்கும் நேரம் நெருங்கியது. அதே நேரத்தில் ஒரு பன்றி குட்டி போடுவதற்க்காக தவித்துக்கொண்டிருந்தது. அவரது மகனும் கோடாரயுடன் தயாராக இருந்தான்.
அவர் இறக்கும் தறுவாயில் இருக்கும் போது அவருக்கு ஒரு ஞானம் தோன்றியது. அவர் அவரது மகனை பார்த்து நான் இந்த பன்றியின் வாழ்கையை வாழ்ந்து பார்க்க ஆசை படுகிறேன் அதனால் நீ என்னை கொல்லாதே! என்னை கொல்லாதே! என்று உயிரிழந்தார். அதே நேரத்தில் ஒரு அழகான பன்றி குட்டி ஒன்று பிறந்தது.
அவர் ஞானத்தில் தோன்றியது என்னவாக இருக்கும்? ஏன் அவர் கடைசி நேரத்தில் அப்படி அவரது மகனிடம் சொல்லவேண்டும்?
...
...
...
அவரது சாகும் நேரத்தில் அவரிடம் பாதி உயிரும், அந்த பிறக்கும் நிலையில் உள்ள பன்றியிடம் பாதி உயிரும் இருந்தது. அப்போது என்ன எண்ணம் அந்த ஞானிக்கும் தோன்றி இருக்க முடியும்.
அந்த பன்றி பிறக்க போகும் உயிர் அது வாழ்க்கை அதற்க்கு பெரிதாக இருக்குமா இல்லையா? அந்த பன்றி உயிர் வாழ ஆசை படுவது ஒன்றும் ஆசர்யபடுவதற்க்கில்லை
பன்றியாக இருந்தாலும் அதுவும் உயிர் வாழ அசைபடுமல்லவா அது தான் அந்த ஞானிக்கும் தோன்றியது.
கதையை பற்றி உங்கள் யோசனையை கூறலாம்...
3 comments:
உள்ளேன் ஐயா!
வேற ஒன்னும் தெரியலை நண்பா
நோ யோசனை தோணிங் நண்பா..
ஆகவே, ப்ரசண்ட் சார்...
உண்மையான மறுஜென்மம் நிகழ்வுகள் சொல்லுக பாஸ்
Post a Comment