Friday, December 19, 2008

நேர்மைக்கான பரிசு - (தன் வினை தன்னை சுடும்)


ஒரு ஊரில் வீடு / மனை கட்டும் தொழில் அதிபர் ஒருவர் அந்த தொழிலில் கொடி கட்டி பறந்தார். ஒரு நாள் அவர் அவரது மேற்பார்வையாளரிடம் நான் இத்தனை வருடகாலம் இந்த தொழிலில் நிறைய வீடுகளை கட்டியுள்ளேன். தற்போது ஒரு புதிய வீடு கட்ட முடிவு செய்துள்ளேன். அதை நீங்கள் தான் கட்ட வேண்டும். 

இந்த வீடு இதுவரை நான் கட்டிய வீட்டை விட மிகவும் அற்புதமாக இருக்க வேண்டும். தரமான பொருள்களை பயன்படுத்தவும், பணம் ஒரு பொருட்டு அல்ல என்றும் சொல்லி விட்டு நான் ஒரு வருடகாலம் வெளிநாடு செல்ல விருக்கிறேன். நான் திரும்பி வருவதற்குள் இந்த வேலையை முடிக்குமாறு கூறிச்சென்றார். 

அந்த மேற்பார்வையாளர் இது தான் நமக்கு தகுந்த சந்தர்ப்பம் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மிகவும் மளிவான பொருள்களை பயன்படுத்தி வீட்டின் வெளிப்புறம் பிரமாண்டமாகவும் வீட்டை கட்டி முடித்தார்.  

ஒருவருடம் கழித்து தொழிலதிபர் பார்வை இடுவதற்காக வந்தார். அனைத்தையும் பார்வையிட்டார். பிறகு அந்த மேற்பார்வையாளரிடம் பேசினார். அப்போது அந்த மேற்பார்வையாளர் நான் கட்டிய வீடுகளிலேயே இது தான் சிறந்தது என்றார். 

அந்த வீட்டின் பத்திரத்தையும், சாவி கொத்தையும் அந்த மேற்பார்வையாளரிடம் கொடுத்து இதுநாள் வரை நீங்கள் என்னிடம் நேர்மையாக வேலை பார்த்ததற்காக இதை நான் உங்களுக்கு பரிசாக தருகிறேன் இதை வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? எப்போதும் பிறர் உன்னை கவனிகாவிடிலும் ஒரு காரியத்தை நேர்மையாகவும், உண்மையாகவும், சரியாகவும் செய்யவேண்டும். பிறரிடம் நாம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.  எப்போதும் நல்ல கொள்கைகளுடன் வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் அனைத்தும் நல்ல தாகவே கிடைக்கும்.  

அந்த மேற்பார்வையாளர் அவரை கவனிக்க யாரும் இல்லை என்று நிறைய கலப்படம் செய்தார். அது அவருக்கு கிடைக்க போகும் பரிசு என்று தெரியாமல் தவறு செய்தார். அது அவருக்கு நஷ்டத்தை விளைவித்தது...

அவைவரும் நேர்மையாகவும், உண்மையாகவும், சரியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த கதையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
உங்கள் கருத்துகளை பதியவும்...

2 comments:

Anonymous said...

An excellent story.... good one... இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

நீதிக்கதைகளா? அறிவாளிங்க சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்!