ஒரு ஏமாற்றமடைந்த குளிர்பானம் விற்பனையாளர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பி வருகிறார்.
அவரது நண்பன் அவரிடம் நீங்கள் அராபிய நாடுகளில் வெற்றி அடையாததற்கு என்ன காரணம் என்று கேட்டார்.
அதற்கு அந்த விற்பனையாளர் எனக்கு அராபிய நாட்டிற்கு மாற்றம் கிடைத்த பொழுது நான் மிகவும் சந்தோசம் அடைந்தேன். எப்படியாவது அந்த நாட்டில் வெற்றியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.
ஆனால் எனக்கு அதில் பிரச்சனை இருந்தது. அது என்ன என்றால் எனக்கு அராபிய மொழி தெரியாது. இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. படத்தின் மூலமாக சொன்னால் அனைவருக்கும் புரியும் என்ற எண்ணத்தில் மூன்று விளம்பர படங்களை தயார் செய்தேன்.
முதல் படத்தில் ஒரு மனிதன் பாலைவனத்தில் மிகவும் களைத்து, தள்ளாடிய நிலையில் மயக்கம் அடைவது போலவும்.
இரண்டவது படத்தில் அந்த மனிதன் எங்களது குளிர் பானத்தை அருந்துவது போலவும்
முன்றாவது படத்தில் அந்த மனிதன் மிகவும் புத்துணர்வுடன் நடப்பது போலவும்
தயார் செய்து அதை அனைத்து இடங்களிலும் பிரபலம் அடையச் செய்தேன்.
அதற்கு அந்த விற்பனையாளரின் நண்பன் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்க வேண்டுமே என்று கேட்டான்.
அதற்கு அந்த விற்பனையாளர் என்ன சொல்லி இருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா...
விற்பனையாளர் கூறியதாவது: நீ சொல்வது சரிதான்... எனக்கு அராபிய மொழி தெரியாது. அதுமட்டும் அல்ல அராபிய மக்கள் வலது புறத்தில் இருந்து இடது புறமாக படிப்பார்கள் என்பதைக் கூட நான் அறியவில்லை!!!!
இந்த கதை பற்றி உங்கள் கருத்துகளை பதியவும்...
2 comments:
ஹா ஹா ஹா
அந்தோ பரிதாபம்............
:)))
Post a Comment