Wednesday, February 25, 2009

தாய் என்னும் கோயில்...


ஒரு மகன் தன் தாயை ஒரு இடத்திற்கு அழைத்து செல்வதாக கூரி வெளியே கூட்டி சென்றான். பாதி வழியில் அம்மா நான் ஒரு பொருளை மறந்து விட்டேன். அதை பொய் எடுத்துக்கொண்டு வருகிறேன் அது வரையிலும் நீ இங்கு காத்திரு என்று சொல்லிவிட்டு ஒரு காகிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றான். வெகுநேரம் கழித்தும் அவன் வரவில்லை. அப்போது அங்கு ஒரு காவல் துறை அதிகாரி அங்கு வந்து அந்த அம்மாவை விசாரித்தார். அவள் என் மகனுக்காக காத்துக்கொண்டு இருகிறேன் என்றார். அதை கேட்டு அந்த காவல் துறை அதிகாரி சென்று விட்டார். வெகு நேரம் கழித்து மறுபடியும் அந்த வழியில் வந்த அதிகாரி இன்னும் உன்மகன் வரவில்லையா என்று கேட்டு விளக்கமாக விசாரித்தார். அப்போது அந்த அம்மா என் மகன் ஒரு பொருளை மறந்து வைத்து விட்டு வந்து விட்டான். அதை எடுத்துக்கொண்டு வருவதற்காக சென்றுள்ளான். பிறகு அந்த காகிதத்தை காட்டினாள். அந்த அதிகாரிக்கு மிகவும் அதிர்ச்சி தரும் வகையிலான வாசகம் அதில் எழுதி இருந்தது. அதில் என் அம்மா இறந்து விட்டால் இந்த தொலை பேசியில் எனக்கு தெரிவிக்கவும் என்று எழுதி இருந்தது. இதை கேட்ட அந்த தாய் மனம் என்ன பாடு பட்டிருக்கும். இதை கேட்ட அந்த தாய் நல்ல வேலையாக என்னை கொல்லாமல் விட்டு சென்றானே. அவன் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று அந்த தாய் அவனை மனமார வாழ்த்தினாள். அந்த தாய்க்கு சுமார் 75 வயதிருக்கும். இப்படி பட்ட ஒரு மகனை பெற்றதற்கு அந்த தாய் மிகவும் மனம் வருந்தினாள். இது போன்ற மகன்கள் உலகில் வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்கள்.  

இதை பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...

Wednesday, February 04, 2009

கதையின் கரு


ஒரு ஊரில் தச்சன் ஒருவன் இருந்தான்
அவன் நாற்காலி ஒன்றை பழுது பார்த்துகொண்டிருந்தான். அப்போது ஒரு கூர்மையான ஆணி ஒன்றை பிடுங்கி அவன் அருகில் வைத்துக் கொண்டான். அந்த ஆணி இருப்பது தெரியாது அவனது மகன் அதன் மேல் அமர்த்தான்.

அதனால் அவனுக்கு காயம் ஏற்பட்டது, நிறைய ரத்தம் கொட்டியது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு நிறைய பணம் செலவானது. அந்த தச்சன் நிறைய கடன் வாங்கி அவன் மகனை காப்பற்றினான். சில நாட்கள் கழிந்தது அவனால் கடனை திரும்பி அடைக்க முடியவில்லை. அவன் நிறைய முறைகளை கையாண்டும் அவனால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை. 

முடிவாக அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு செய்தான். தற்கொலை செய்துகொண்டான். அதை பார்த்து அவன் மனைவி மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்த கதை மூலம் என்ன தெரிகிறது...
கதையின் கரு : தயவு செய்து ஆணிய புடுங்க வேண்டாம்...

தத்துவமுங்கோ...


மொக்கை எண்: 3008
காதலன்: நம்ம காதல மெதுவா வீட்டுல சொல்ல ஆரமிட்சிடேன்.
காதலி: குட், அதுக்கு என்ன சொன்னாங்க.
காதலன்: மெதுவா சொன்னதால யார் காதுலயும் விழல.

மொக்கை எண்: 3009
அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்கிறது...
"வேற சூப்பர் பிகர் உசார் பண்ணிட்ட போல"


மொக்கை எண்: 3010
மாப்பிளை என்ன பண்ணறார் 
ரயில் ஓடும்போது நிப்பார். ரயில் நிக்கும் பொது இவர் ஓடுவார்.
அவ்வளவு பிசியா. ரயில்வே டீ, காப்பி விக்கிறார்.


மொக்கை எண்: 3011
கம் B1
கம் B2
கம் B3
கம் B4
கம் B5
கம் B6
கம் B7
கம் B8

எப்படி உன்ன கம்பி என்ன வெட்சேன் பாத்தியா


மொக்கை எண்: 3012
வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலை மட்டும் உனக்கு தருவேன் ஏன்னா "தோல்(ள்) கொடுபவன் தான் உண்மையான தோழன்"

மொக்கை எண்: 3013
பாவம், ஐயோ பாவம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நீங்க ஒரு பொண்ண காதலித்தால் அது பாவம் அந்த பொண்ணு உங்களை காதலித்தால் ஐயோ பாவம்


தத்துவம் எண்: 1008
லைப் என்பது ஒரு ஒன்வே ரோடு. 
திரும்பி பாக்கலாம் ஆனா திரும்பி போக முடியாது.

தத்துவம் எண்: 1009
எந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ 
அந்த பொருளினால் உனக்கு துன்பம் இல்லை


தத்துவம் எண்: 1010
நச்சுனு ஒன்னு சொல்லறேன் கேட்டுக்க
"காதலுக்காக சாகவும் கூடாது,
காதலிக்காம சாகவும் கூடாது."


கவிதை எண்: 2012
அவள் கண்கள் பார்த்து நான் சொல்ல வந்த காதலை, 
அவள் புன்னகை பார்த்து புரிந்து கொண்டேன். 
அவள் அல்ரெடி புக்ட் (booked) என்று.

கவிதை எண்: 2013
நண்பர்கள் பிரிவதில்லை பிரிவதற்கு அவர்கள் உறவுகள் அல்ல உணர்வுகள்