Wednesday, February 25, 2009

தாய் என்னும் கோயில்...


ஒரு மகன் தன் தாயை ஒரு இடத்திற்கு அழைத்து செல்வதாக கூரி வெளியே கூட்டி சென்றான். பாதி வழியில் அம்மா நான் ஒரு பொருளை மறந்து விட்டேன். அதை பொய் எடுத்துக்கொண்டு வருகிறேன் அது வரையிலும் நீ இங்கு காத்திரு என்று சொல்லிவிட்டு ஒரு காகிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றான். வெகுநேரம் கழித்தும் அவன் வரவில்லை. அப்போது அங்கு ஒரு காவல் துறை அதிகாரி அங்கு வந்து அந்த அம்மாவை விசாரித்தார். அவள் என் மகனுக்காக காத்துக்கொண்டு இருகிறேன் என்றார். அதை கேட்டு அந்த காவல் துறை அதிகாரி சென்று விட்டார். வெகு நேரம் கழித்து மறுபடியும் அந்த வழியில் வந்த அதிகாரி இன்னும் உன்மகன் வரவில்லையா என்று கேட்டு விளக்கமாக விசாரித்தார். அப்போது அந்த அம்மா என் மகன் ஒரு பொருளை மறந்து வைத்து விட்டு வந்து விட்டான். அதை எடுத்துக்கொண்டு வருவதற்காக சென்றுள்ளான். பிறகு அந்த காகிதத்தை காட்டினாள். அந்த அதிகாரிக்கு மிகவும் அதிர்ச்சி தரும் வகையிலான வாசகம் அதில் எழுதி இருந்தது. அதில் என் அம்மா இறந்து விட்டால் இந்த தொலை பேசியில் எனக்கு தெரிவிக்கவும் என்று எழுதி இருந்தது. இதை கேட்ட அந்த தாய் மனம் என்ன பாடு பட்டிருக்கும். இதை கேட்ட அந்த தாய் நல்ல வேலையாக என்னை கொல்லாமல் விட்டு சென்றானே. அவன் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று அந்த தாய் அவனை மனமார வாழ்த்தினாள். அந்த தாய்க்கு சுமார் 75 வயதிருக்கும். இப்படி பட்ட ஒரு மகனை பெற்றதற்கு அந்த தாய் மிகவும் மனம் வருந்தினாள். இது போன்ற மகன்கள் உலகில் வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்கள்.  

இதை பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...

1 comment:

நட்புடன் ஜமால் said...

மிகவும் வருந்தினேன் படித்துவிட்டு ...