Monday, December 29, 2008

இது ஒரு விற்பனையாளரின் கதை!!!ஒரு ஏமாற்றமடைந்த குளிர்பானம் விற்பனையாளர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பி வருகிறார்.

அவரது நண்பன் அவரிடம் நீங்கள் அராபிய நாடுகளில் வெற்றி அடையாததற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

அதற்கு அந்த விற்பனையாளர் எனக்கு அராபிய நாட்டிற்கு மாற்றம் கிடைத்த பொழுது நான் மிகவும் சந்தோசம் அடைந்தேன். எப்படியாவது அந்த நாட்டில் வெற்றியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

ஆனால் எனக்கு அதில் பிரச்சனை இருந்தது. அது என்ன என்றால் எனக்கு அராபிய மொழி தெரியாது. இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. படத்தின் மூலமாக சொன்னால் அனைவருக்கும் புரியும் என்ற எண்ணத்தில் மூன்று விளம்பர படங்களை தயார் செய்தேன்.

முதல் படத்தில் ஒரு மனிதன் பாலைவனத்தில் மிகவும் களைத்து, தள்ளாடிய நிலையில் மயக்கம் அடைவது போலவும்.

இரண்டவது படத்தில் அந்த மனிதன் எங்களது குளிர் பானத்தை அருந்துவது போலவும்

முன்றாவது படத்தில் அந்த மனிதன் மிகவும் புத்துணர்வுடன் நடப்பது போலவும் 

தயார் செய்து அதை அனைத்து இடங்களிலும் பிரபலம் அடையச் செய்தேன்.

அதற்கு அந்த விற்பனையாளரின் நண்பன் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்க வேண்டுமே என்று கேட்டான்.

அதற்கு அந்த விற்பனையாளர் என்ன சொல்லி இருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா...விற்பனையாளர் கூறியதாவது: நீ சொல்வது சரிதான்... எனக்கு அராபிய மொழி தெரியாது. அதுமட்டும் அல்ல அராபிய மக்கள் வலது புறத்தில் இருந்து இடது புறமாக படிப்பார்கள் என்பதைக் கூட நான் அறியவில்லை!!!!


இந்த கதை பற்றி உங்கள் கருத்துகளை பதியவும்...

Friday, December 19, 2008

நேர்மைக்கான பரிசு - (தன் வினை தன்னை சுடும்)


ஒரு ஊரில் வீடு / மனை கட்டும் தொழில் அதிபர் ஒருவர் அந்த தொழிலில் கொடி கட்டி பறந்தார். ஒரு நாள் அவர் அவரது மேற்பார்வையாளரிடம் நான் இத்தனை வருடகாலம் இந்த தொழிலில் நிறைய வீடுகளை கட்டியுள்ளேன். தற்போது ஒரு புதிய வீடு கட்ட முடிவு செய்துள்ளேன். அதை நீங்கள் தான் கட்ட வேண்டும். 

இந்த வீடு இதுவரை நான் கட்டிய வீட்டை விட மிகவும் அற்புதமாக இருக்க வேண்டும். தரமான பொருள்களை பயன்படுத்தவும், பணம் ஒரு பொருட்டு அல்ல என்றும் சொல்லி விட்டு நான் ஒரு வருடகாலம் வெளிநாடு செல்ல விருக்கிறேன். நான் திரும்பி வருவதற்குள் இந்த வேலையை முடிக்குமாறு கூறிச்சென்றார். 

அந்த மேற்பார்வையாளர் இது தான் நமக்கு தகுந்த சந்தர்ப்பம் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மிகவும் மளிவான பொருள்களை பயன்படுத்தி வீட்டின் வெளிப்புறம் பிரமாண்டமாகவும் வீட்டை கட்டி முடித்தார்.  

ஒருவருடம் கழித்து தொழிலதிபர் பார்வை இடுவதற்காக வந்தார். அனைத்தையும் பார்வையிட்டார். பிறகு அந்த மேற்பார்வையாளரிடம் பேசினார். அப்போது அந்த மேற்பார்வையாளர் நான் கட்டிய வீடுகளிலேயே இது தான் சிறந்தது என்றார். 

அந்த வீட்டின் பத்திரத்தையும், சாவி கொத்தையும் அந்த மேற்பார்வையாளரிடம் கொடுத்து இதுநாள் வரை நீங்கள் என்னிடம் நேர்மையாக வேலை பார்த்ததற்காக இதை நான் உங்களுக்கு பரிசாக தருகிறேன் இதை வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? எப்போதும் பிறர் உன்னை கவனிகாவிடிலும் ஒரு காரியத்தை நேர்மையாகவும், உண்மையாகவும், சரியாகவும் செய்யவேண்டும். பிறரிடம் நாம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.  எப்போதும் நல்ல கொள்கைகளுடன் வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் அனைத்தும் நல்ல தாகவே கிடைக்கும்.  

அந்த மேற்பார்வையாளர் அவரை கவனிக்க யாரும் இல்லை என்று நிறைய கலப்படம் செய்தார். அது அவருக்கு கிடைக்க போகும் பரிசு என்று தெரியாமல் தவறு செய்தார். அது அவருக்கு நஷ்டத்தை விளைவித்தது...

அவைவரும் நேர்மையாகவும், உண்மையாகவும், சரியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த கதையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
உங்கள் கருத்துகளை பதியவும்...

Saturday, December 13, 2008

வெற்றயின் ரகசியம் - (துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்)


ஒரு கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தான். அதற்கு அவன் சிறு சிறு முயற்சிகளை மேற் கொண்டான். இருந்தாலும் அவனால் முழுமையாக வெற்றி பெற இயலவில்லை.

ஒரு நாள் அந்த கிராமத்திற்கு மகான் ஒருவர் வந்தார். அந்த மகான் கிராம மக்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறினார். அவரிடம் அந்த இளைஞன் சென்று வெற்றிக்கான ரகசியம் என்ன என்று கேட்டான். அதற்க்கு அந்த மகான் மறு நாள் காலை நதிக்கரைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு சொன்னார். அவனும் மறு நாள் காலை நதிக்கரைக்கு சென்று மகானை சந்தித்தான். 

அந்த மகான் அவனை கழுத்து முங்கும் வரை நதிக்குள் அழைத்து சென்றார். அதன் பிறகு சற்றும் எதிபாராத விதமாக இளைஞனின் தலையை பிடித்து தண்ணீருக்குள் முக்கினார். சிறிது நேரத்தில் அவனால் தண்ணீருக்குள் இருக்க முடியவில்லை. அவன் மிகவும் தத்தளித்தான். இரண்டு மணித்துளிக்கு பிறகு அவர் அவனை நீரில் இருந்து வெளியே எடுத்தார். 

அப்போது அவர் அவனை பார்த்து நீ தண்ணீருக்குள் இருந்த போது உனக்கு என்ன தேவை பட்டது என்றார். சற்றும் தயங்காமல் காற்று என்றான். அதற்க்கு அவர் நீ தண்ணீரில் இருக்கும் போது உனக்கு காற்று எப்படி தேவைப்பட்டதோ அது போன்று, வெற்றி உனக்கு எப்போது உயிர் மூட்சாக விளங்குகிறதோ அப்போது தான் நீ வெற்றியை பெறமுடியும் என்று கூறினார்.

இக்கருத்து அவனுல் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மிகவும் கடினமாக உழைத்து வெற்றிகளை குவித்தான். உங்கள் அனைவருக்கும் இந்த கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை பதியவும்

Friday, December 05, 2008

தத்துவமுங்கோ...


தத்துவம் என்: 1001
வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!

தத்துவம் என்: 1002
லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துகாட்டு : நமீதா எவ்ளோ பெரிய நடிகை ஆனா அவங்க பாபுலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம். நினைவில் கொள்க...

தத்துவம் என்: 1003
பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்...
அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!

தத்துவம் என்: 1004
வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது...

தத்துவம் என்: 1005
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...

தத்துவம் என்: 1006
வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி" என்றவர்கள்.
வெற்றி கிடைத்ததும் "விடா முயற்சி" என்றார்கள்.
இதுதான் உலகம்.

தத்துவம் என்: 1007
நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும் 
அதை நீ ஒப்பு கொள்ளும் போது...


கவிதை என் : 2001
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை - எக்ஸாம் ஹால்லில்...
என்ன கொடுமை சார்...

கவிதை என் : 2002
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்...

கவிதை என் : 2003
ஆசை படுவதை மறந்து விடு!
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!

கவிதை என் : 2004
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.

கவிதை என் : 2005
வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்.

கவிதை என் : 2006
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கவிதை என் : 2007
கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

கவிதை என் : 2008
நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்.

கவிதை என் : 2009
நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால் 
காதலி மீது கோபம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன் புரிந்து கொள்வான் 
காதலி புரியாமல் கொள்வாள்.

கவிதை என் : 2010
நெஞ்சை தொட்ட கவிதை 
தூசி பட்ட கண்களும் 
காதல் பட்ட இதயமும் 
எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்...

கவிதை என் : 2011
காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்தேன் 
நீ தூசியை வந்து என் கண்ணை கலங்க வைத்த போது


மொக்கை என்: 3001
3 G A P A 6 = ? யோஷிங்க

எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!

இது கூட தெரியாத?
விடை: முஞ்சிய பாரு...

மொக்கை என்: 3002
வாடிக்கையாளர் : இந்த டிவி வேலை என்ன?
விற்பனையாளர் : 1,00,000 ரூபாய்.
வாடி : அப்படி என்ன ஸ்பெஷல்?
விற்ப : டிவில விஜய் படம் வந்தா அதுவா தானா வேற சேனல் மாறிடும்...
அதான் இவ்ளோ...

மொக்கை என்: 3003
ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).

மொக்கை என்: 3004
லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!

மொக்கை என்: 3005
தினந்தோறும் எனது பிரார்த்தனை...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
அது போதும் எனக்கு...

மொக்கை என்: 3006
ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்

மொக்கை என்: 3007
எப்படி "ANGRY" இனிப்பாக மாற்றுவது?
"J" சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்

Tuesday, November 25, 2008

தாய்மை


தாய்!
******
உன்னை கழுத்து நிறைய நகைகளோடு கட்டிக் கொடுத்தார்களாம்; 
புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன்! 
நாங்கள் படிப்பதற்கு  ஒரு நகை குறைந்தது; 
அப்பாவுக்கு தொழில் கஷ்டம் இன்னொரு நகை குறைந்தது; 
அக்காவுக்கு திருமணம் மொத்த நகையும் போனது; 
உனக்கு தாலிக்கயிறு தான் மிச்சம்! 
இன்னமும் நீ மாறாத அதே புன்னகையுடன்... 
புகைப்படத்தில் பார்த்தது போல! 

தாய்மை பாரம் அறியாது.

அம்மா
********
குழந்தை
ப் பருவந்தொட்டே தொட்டதெற்கெல்லாம்
அம்மாவிடம் அடிவாங்கியே வளர்ந்து வந்தவன்...
பென்சில் தின்றதற்காக இடக்கையிலே சூடுபட்டது
உற்றுநோக்கினால் இன்றும் தெரியும்!
இன்று அதே அம்மா என் குழந்தையோடு குழந்தையாக...
கண்ணில் கண்ணீர்வர கொஞ்சிக் கொஞ்சிச் சிரிக்கிறாள்!
சாக்பீஸ் தின்றாலும சோற்றைக் கொட்டினாலும்
அதட்டாமல் திருத்துகிறாள்! 
கை சூப்பச் சொல்லி வேடிக்கை பார்க்கிறாள்!
எனக்கும் வேடிக்கையாக இருக்குது...
இத்தனை நாளாய் இந்த மனதை 
எங்கே ஒளித்திருந்தாய்?

தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோடு இருக்க 
நீ கோயில் தேடி அலைவது எதற்கு.