Friday, December 05, 2008

தத்துவமுங்கோ...


தத்துவம் என்: 1001
வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!

தத்துவம் என்: 1002
லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துகாட்டு : நமீதா எவ்ளோ பெரிய நடிகை ஆனா அவங்க பாபுலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம். நினைவில் கொள்க...

தத்துவம் என்: 1003
பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்...
அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!

தத்துவம் என்: 1004
வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது...

தத்துவம் என்: 1005
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...

தத்துவம் என்: 1006
வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி" என்றவர்கள்.
வெற்றி கிடைத்ததும் "விடா முயற்சி" என்றார்கள்.
இதுதான் உலகம்.

தத்துவம் என்: 1007
நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும் 
அதை நீ ஒப்பு கொள்ளும் போது...


கவிதை என் : 2001
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை - எக்ஸாம் ஹால்லில்...
என்ன கொடுமை சார்...

கவிதை என் : 2002
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்...

கவிதை என் : 2003
ஆசை படுவதை மறந்து விடு!
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!

கவிதை என் : 2004
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.

கவிதை என் : 2005
வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்.

கவிதை என் : 2006
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கவிதை என் : 2007
கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

கவிதை என் : 2008
நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்.

கவிதை என் : 2009
நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால் 
காதலி மீது கோபம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன் புரிந்து கொள்வான் 
காதலி புரியாமல் கொள்வாள்.

கவிதை என் : 2010
நெஞ்சை தொட்ட கவிதை 
தூசி பட்ட கண்களும் 
காதல் பட்ட இதயமும் 
எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்...

கவிதை என் : 2011
காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்தேன் 
நீ தூசியை வந்து என் கண்ணை கலங்க வைத்த போது


மொக்கை என்: 3001
3 G A P A 6 = ? யோஷிங்க

எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!

இது கூட தெரியாத?
விடை: முஞ்சிய பாரு...

மொக்கை என்: 3002
வாடிக்கையாளர் : இந்த டிவி வேலை என்ன?
விற்பனையாளர் : 1,00,000 ரூபாய்.
வாடி : அப்படி என்ன ஸ்பெஷல்?
விற்ப : டிவில விஜய் படம் வந்தா அதுவா தானா வேற சேனல் மாறிடும்...
அதான் இவ்ளோ...

மொக்கை என்: 3003
ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).

மொக்கை என்: 3004
லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!

மொக்கை என்: 3005
தினந்தோறும் எனது பிரார்த்தனை...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
அது போதும் எனக்கு...

மொக்கை என்: 3006
ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்

மொக்கை என்: 3007
எப்படி "ANGRY" இனிப்பாக மாற்றுவது?
"J" சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்

15 comments:

Anonymous said...

தினந்தோறும் எனது பிரார்த்தனை...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
அது போதும் எனக்கு...

wow i like it.....

RAMYA said...

இவ்வளவோ தத்துவமா?
இவ்வளவோ கவுஜையா?
இவ்வளவோ அறிவாப்பா உனக்கு
தலைப்புக்கு ஏத்த அறிவாளிதான்ப்பா நீ

RAMYA said...

//
பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்...
அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!
//

அதனாலே தான் உங்க வீட்டிலே கண்ணாடியே இல்லையா, சர்தான்

RAMYA said...

//
தத்துவம் என்: 1004
வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது...
//


இவ்வளவோ பொது அறிவாப்பா, சரிங்கப்பு....

RAMYA said...

//
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...
//

நிறைய பொய் சொல்லி இதை கண்டுபிடிச்சீங்களா ? உண்மையை எல்லாம் இப்படி சொல்லக்கூடாது

RAMYA said...

//
கவிதை என் : 2001
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை - எக்ஸாம் ஹால்லில்...
என்ன கொடுமை சார்...
//

ஏன் கேக்கணும் கைலே பிட் இல்லையா, புரியாத பிள்ளையா இருக்கீங்களே, ஹையோ ஹையோ

RAMYA said...

//
கவிதை என் : 2003
ஆசை படுவதை மறந்து விடு!
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!
//

உஷாரு, உஷாரு...........

RAMYA said...

//
கவிதை என் : 2004
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.
//

அட என்னிடமும் கலாம் இதே தான் சொன்னாரு, சத்தியமாங்க
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

RAMYA said...

//
மொக்கை என்: 3002
வாடிக்கையாளர் : இந்த டிவி வேலை என்ன?
விற்பனையாளர் : 1,00,000 ரூபாய்.
வாடி : அப்படி என்ன ஸ்பெஷல்?
விற்ப : டிவில விஜய் படம் வந்தா அதுவா தானா வேற சேனல் மாறிடும்...
அதான் இவ்ளோ...
//

அந்த டீலர் இப்போ இருக்குற இடம் தெரிய வில்லையாம்.

RAMYA said...

//
மொக்கை என்: 3003
ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).
//

இதை படிச்சப்புறம் எனக்கு ஒரே அஜீரணமா இருக்குங்க,
எதாவது Syrupu இருக்கா???

RAMYA said...

//
மொக்கை என்: 3005
தினந்தோறும் எனது பிரார்த்தனை...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
அது போதும் எனக்கு...
//

உங்கள் வேண்டுதல் பலிக்க என் வாழ்த்துக்கள்.......

சிம்பா said...

பாம்பு கடிச்சு பொழச்சவன் உண்டு..

நம்ம வணங்கா முடி அடிச்சு நிலச்சவன் இல்ல...

முதல் பார்வை.. இன்னிக்கு தான் உங்க பதிவு கண்ணுக்கு பட்டுது...

அருமையா இருக்கு

அண்ணன் வணங்காமுடி said...

//பாம்பு கடிச்சு பொழச்சவன் உண்டு..

நம்ம வணங்கா முடி அடிச்சு நிலச்சவன் இல்ல...

முதல் பார்வை.. இன்னிக்கு தான் உங்க பதிவு கண்ணுக்கு பட்டுது...

அருமையா இருக்கு

//
மிக்க நன்றி... மீண்டும் வருக...

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லாத் தத்துவமும் நல்லா கலகலப்பா இருக்கு அண்ணே

ஏன் இந்த “ன்’ கிட்ட மட்டும் ஓரவஞ்சனை.

அண்ணன் வணங்காமுடி said...

//
எல்லாத் தத்துவமும் நல்லா கலகலப்பா இருக்கு அண்ணே

ஏன் இந்த “ன்’ கிட்ட மட்டும் ஓரவஞ்சனை

//
வாஸ்து சாஸ்த்ரப்படி "ன்" ரொம்ப நல்லதாம்.
அதான் பின்பற்றினேன் நீங்களும் இத பின்பற்றுங்க. அமோகமா இருக்கும்