Monday, April 27, 2009

அறிவாளிகளாமா...


அறிவாளிகள் எப்போதும் இந்த மாதிரித்தான் யோசிப்பாங்கலாமா


மூலையை பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் சொன்னாங்க
அதுக்காக இந்த மாதிரியா



பாதுகாப்பா வைக்கறதுக்கு சொன்னா 
இந்தமாதிரியெல்லாம் யோசிச்சு 
எப்படி எல்லாம் அறிவாளிங்கங்கரத நிருபிக்கராங்கலாமா


இவருதான் அறிவாளியாம் மிச்சவங்க எல்லாம் முட்டாளா...


உண்மையிலயே இவருதான் அறிவாளி. 
பொண்டாட்டிய எந்த மாதிரி பயன்படுத்தறார் பாருங்க


உண்மையிலயே லயன், டைகர் இரண்டையும் சேத்து பக்கமுடியுமா?
இங்க காமிக்கறாங்க பாருங்க



மீரா ஜாஸ்மின காமிக்கராகன்னு சொன்னாங்க.
அது இது தானா

உங்க பார்வையை பற்றி சொல்லுங்க பாப்போம்...


Friday, April 24, 2009

கவிதை களஞ்சியம்...




எதிர் மறை

உன்னை நான் வட்டமிட்டேன், 
நீயோ சத்தமிட்டாய்
உன்னை நான் முத்தமிட்டேன், 
நீயோ சட்டமிட்டாய்
திருமணத்திற்கு நான் திட்டமிட்டேன், 
நீயோ டாட்டா காட்டி (nano) வில் சென்று விட்டாய்.

காதல் பைத்தியம்

உன் காதலால்
கப்பல் போல் மிதந்தேன் 
விமானம் போல் பறந்தேன்
மழை போல் விழுந்தேன் 
வெயில் போல் சுட்டேன் 
மழலை போல் தவழ்தேன்
மரம் போல் நின்றேன்
உன்னால் ஆனேன் பைத்தியம் 
இதற்க்கு உண்டா வைத்தியம்


நிலைமை
வா என்றாய், போ என்றாய் 
நில் என்றாய், நட என்றாய்
செல் என்றாய், சொல் என்றாய்
இவை அனைத்தையும் செய்தேன் நான்
டாட்டா என்றாய், பாய் பாய் என்றாய் - கடைசியில் 
இஞ்சி தின்ன குரங்குபோல் ஆனேன் நான்...

பின்குறிப்பு: இது என் படைப்பு கவிதை மட்டுமே, அனுபவம் அல்ல...



Monday, April 20, 2009

என்ன கொடும சார்...



சம்பள உயர்வு, வேலை முன்னேற்றம், அலுவலகத்தில் பாராட்டு இவை எது இல்லா விட்டாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் வேலை பர்க்கசொன்னா சம்பளமே இல்லாமல் கூட வேலை பார்க்கலாம். நான் பார்பேன், அப்போ நீங்க.




நான் மட்டும் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து, அந்த அலுவலகத்தில் நான் மேனேஜர் ஆவோ, அணி தலைவராவோ இருந்தேன்னா இந்த மாதிரி ஒரு அணியை தான் தேர்ந்தெடுப்பேன்.




இந்த படத்த பார்த்த பிறகு நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். பஜாஜ் கம்பெனில வேலைக்கு சேரலாம்னு. ஆனா சேப்பாங்கலானு தான் சந்தேகம்.




இந்த மாதிரி காஸ் சப்ளை பண்ணறதுக்கு ஆட்கள் வந்தாங்கன்னா. காஸ் பஞ்சம் வராம என்ன பண்ணும்.


என்ன மக்களே இத பத்தி உங்களுக்கு எதாவது தோணுதா. தோணும், தோணனும், உடனே சொல்லுங்க என்ன தோனுதுன்னு.


Saturday, April 18, 2009

எழுத மறந்த திருக்கு(ல)றள்...


திருவள்ளுவர் எழுத மறந்த குரல்ஸ்

ஆட்டலில் ஆட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
ஓட்டலில் ஆட்டப்படும்.


சரக்கடிக்க சைடிஷ் இல்லாத போது முறுக்கு வாங்க
மூனுரூபாய் கொடுக்கும் நட்பு.


நியூட்டன் சொல்லமறந்த விதிகள்

காப்பி விதி: எப்போ சூடா காப்பி குடிக்கனும்னு நினைத்து உட்கந்தாலும், உடனே மேனேஜர் எதாவது வேலை சொல்லி அந்த காப்பி ஆறும் வரை உங்களை விடமாட்டார்

டெலிபோன் விதி: நீங்கள் ஏப்போ தப்பான எண்ணை போட்டாலும் அந்த நம்பர் உடனே ரிங் ஆகும். 

மெக்கானிக் ரிப்பேர் விதி: உங்க கைல கிரீஸ் கரை பட்ட உடனே உங்கள் மூக்கு அரிக்கும்.

குளியல் விதி: நீங்க எப்பவும் குளிக்க ஆரம்பிட்ச பிறகுதான் உங்க கைபேசி மணி அடிக்கும்.

பேரூந்து விதி: எப்பவும் நாம காத்திருக்கும் பஸ் வரவே வராது. வந்தாலும் லேட்டா தான் வரும்.

Thursday, April 16, 2009

ஆப்புன்னா இதுதான் ஆப்பு...



இது எல்லாம் கொடுமையின் உச்சகட்டம்.

எவ்வளவு நாள் தான் இவங்களும் பொருத்துபோவாங்க...

எல்லாரும் செஞ்ச தப்புக்கு தண்டனை அடுத்த பிறவியிலதான்னு சொல்லுவாங்க. 
ஆனா இப்பெல்லாம் அந்தந்த பிறவியிலேயே. அதுவும் இந்த மாதிரி வழியா


இங்க பாருங்க என்ன நடக்குதுன்னு

சொல்லி அடிக்கறதுன்னு சொல்லுவாங்க. 
ஆனா இதுதான் படிச்சு அடிக்கறதுன்னு பேரு




மீறி, மீறி, மீறி, மீறி, நல்லா மீறி, அழுத்தி மீறி, பாத்து மீறி, பக்குவமா மீறி




சேமிப்பு ரொம்ப முக்கியம். சிறு சேமிப்பு அதுக்கு இதுதான் வழி.
போடு கண்ணா போடு





என்ன தேயி தேய்க்கராங்கப்பா. இப்ப தெரியுதா. எப்படி இருக்கு.
ஏமாந்தவன் ஒருத்தன் மாட்டினா என்ன பாடு படுத்தரீங்கடா...


Tuesday, April 14, 2009

இப்பவே கண்ணகட்டுதே


நோயாளி: ஆண்டாண்டு காலம் நீடுழீ வாழ எதாவது வழி இருக்கிறதா?
மருத்துவர்: கல்யாணம் பண்ணிக்கோ. 

நோயாளி: அது பயனுள்ளதா இருக்குமா. 
மருத்துவர்: இல்லை, இது போன்ற யோசனை வராமல் தடுக்கும்

--------------------------------------------------------------------------------------------------------------

கல்யாணத்தின் போது மணப்பெண்ணும், மணமகனும் கைகோர்க்கும் நிகழ்வு எதற்க்காக என்று தெரியுமா? 

அதாவது பெருசா ஒன்னும் இல்ல, இரண்டு குத்து சண்டை வீரர்கள் சண்டை துவங்குவதற்கு முன்னால் கை குலுக்கிகொள்வது முறை. அதன் படியே இந்த நிகழ்வு நடக்கிறது

--------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: டார்லிங் இன்னைக்கு நமது கல்யாண நாள். என்ன பண்ணலாம்?.

கணவன்: இரண்டு பேரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அமைதியா இருப்போம்.

--------------------------------------------------------------------------------------------------------------

கல்யாணத்த காதல் கல்யாணம், பெரியோர்களால் நிட்சைக்கப்பட்ட கல்யாணம் என்று இரண்டு விதமா சொல்லும் போது ரொம்ப காமெடியா இருக்கு.

அதாவது சாவுல தற்கொலையையும், கொலையையும் பத்தி சொல்லறமாதிரி இருக்கு

--------------------------------------------------------------------------------------------------------------

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும், ஆனவர்கள் இத படிக்க வேண்டாம்.

யாவருக்கும் இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள்

--------------------------------------------------------------------------------------------------------------

கணவன் கடைக்கு சென்று "பெண்ணை விட மேதை ஆண்" என்ற புத்தகம் இருக்கா.

சேல்ஸ் கேர்ள்: கற்பனை புத்தகங்கள் பக்கத்துல உள்ள அறையில் இருக்கு சார்.

--------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி: ஏன் ஆண்கள் இரண்டாம் கல்யாணம் பண்ண சட்டம் அனுமதிப்பதில்லை

பதில்: சட்டப்படி ஒரு மனிதனை இரண்டு முறை தண்டிப்பது கூடாது.

--------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி: நாய்கள் ஏன் கல்யாணும் பண்ணிகொள்வதில்லை?

பதில்: ஏன்னா அதுங்க ஏற்கனவே நாய்பொழப்பு தான் பொலைகிதுங்க



ஆண்களே இத படிட்ச பிறகு ரொம்ப சந்தோசமா இருக்கீங்களா. இதுகூட கொஞ்ச நேரம்தான். இவைஅனைத்தும் சிரிக்க மட்டும் சிந்திக்க அல்ல...

ஏன்னா பெண்கள் இந்நாட்டின் கண்கள். அதனால பெண்களை குறை சொல்லக்கூடாது. ஆவதும் பெண்ணாலே. அழிவதும் பெண்ணாலே. பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் வளர்ச்சிக்குத்தான் உறுதுணையாக இருகிறார்கள். சில பெண்கள் தான் சற்று தடுமாறி நிலைகுலைந்து வேறுபாதையில் செல்கின்றனர். அதனால் எல்லாரையும் குறை சொல்லக்கூடாது.



Wednesday, April 08, 2009

சூப்பர் ஹீரோக்கள்...


நமது சூப்பர் ஹீரோக்களின் நிலை இப்போது என்னவாக இருக்கும்.

வர்களது தொழில் தற்போது படுத்து விட்டதால் வேலை இல்லாத நமது சூப்பர் ஹீரோக்கள் இப்பொது இதுபோன்ற பல வேலையை செய்து பிளைகின்றனர்.

பாவம் இவர்களது நிலை.


இவர்தான் ஸ்பய்டர் மேன்
ஸ்பய்டர் மேன் பாகம் I, பாகம் II, பாகம் III ல் நடித்தவர். 
இப்போது இவர்நிலை படத்தில் காணலாம், இருந்தாலும் சும்மா சூப்பரா வேலை செயராறு.



இவருதான் பச்சை மனிதன். HULK I, HULK II ல் நடித்தவர்.
இவருக்கு பொண்ணும் சிக்கல, மண்ணும் சிக்கல அதுதான் இந்த நிலைக்கு சென்று விட்டார்



இவங்க எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் இப்படி கூடி கும்மி அடிப்பாங்க.
அதுக்கு ஒரு குழு பேரு வேற. இவங்க எல்லாம் சூப்பர் ஹீரோவாம் அவங்களே சொல்லிக்குவாங்க. இதுல ஒரு பொண்ணு வேற.




எழைகளின் தலைவன், கஷ்டப்படுகிறவர்களுக்கு காக்கும் தெய்வம்.
இவர் எத செஞ்சாலும் சும்மா ஒரு ஸ்டைல்தான்.




இவர்தான் பறக்கும் மனிதன். சூப்பர்மான்.
ஒரு வேலைக்கு இரு வேல பாக்கறார் (பவம் வருமானம் கொஞ்சம் கம்மி போல). இவர் அவர் வேலைக்கும் அவர் தகுதிக்கு ஏத்தமாதிரியே தேடிகிட்டார்.




Monday, April 06, 2009

ஆர்குட் அல்ச்சாடியம்


ஆர்குட் என்பது ஒரு இணையத்தளம். 

நண்பர்கள், இளசுகள், புதுசுகள், பழசுகள் எல்லாம் உறவை புதுப்பிக்க உதவும் ஒருவிதமான இணையத்தளம்.

இதில் பயனுருபவர்கள் சில, சீரழிபவர்கள் பல. 

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...

Scrap: U looking Mallika Sheravath
           i looking Imran aasmi
           Come let us murder the world
அண்ணன் வணங்காமுடி (அ. வ): "டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட… அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?"


Scrap: Hey annikku Ravi yoda b'day party la Krishna voda vandha Janani yoda school friend 
           Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee??? 
           Hi..
அ. வ: "ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?"


Scrap: Hi! if u retain this scrap I will understand that you are interested in meand
           if u delete this scrap, it means you are dreaming about me.
           Now u decide wat to do
அ. வ: "இவரு புத்திசாலியாம்… அப்படியே மடக்கிட்டாராம்"


Scrap: hi,the numerical value of L+O+V+E=54
           but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 108
           54+54= 108
           LOVE+LOVE= FRIENDSHIP
           so friendship is two times greater than love………….
           so will u be my friend ?
அ. வ: "டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ"


Scrap: heyyy gal,Barcelona hav won the champions league finals!
           hurraaaayyyy!!!! come on lets be friends….
அ. வ: "டேய் முடிவா நீ என்னடா சொல்ல வர?"


Scrap: generally i never scrap to unknown ones but this pic just caught my eye…
           awesome pic gal. kalakita po.. lol
அ. வ: "இவரு நல்லவராம்…. ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்…
மொன்ன நாயி…இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு"


Scrap: hi niki.. well can i expect a scrap back from ya..
           well thought u are a person who can read and write… is it true.,… ?
அ. வ: "டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க எப்படிடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவாங்க"


Scrap: If u add me in ur list ill make ur life more pleasant and colorful…watsay?
           scrap me bak if u wannna be ma friend!
அ. வ: "ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்"


Scrap: Eyy black beauty,how are you so fair???
           If you don't add me its very unfair…
அ. வ: "இவருக்கு கவிதை வேற…"


Scrap: nee alaga iruukanu nenikala anna
           ahtuellaam nadathrumu payama irkku
           hi how r u?
           just fun crazy introdution.
           HOW IS IT.
அ. வ: "மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!"


Scrap: had to tell you this….you just remind of somebody, whom i thought i should forget…..
           but still i felt happy lookin at your face. If you understand tamil….
           Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?
அ. வ: "நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்."


Scrap: hi! This is NARESH from chennai adayar workng in XYZland.
           If u like my pic just scrap me. lets hav a nice time
           add me in yahoo messenger.
           i come with cam from 8.30 to 9.30am daily.
           lets hav a nice time
           scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga
அ. வ: "8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்…"


Scrap: hello shaline tell me about ur climate there
அ. வ: "கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?"


Scrap: hai, i've not yet put a scrap tu u.
           first one
அ. வ: "இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ…"


Scrap: can i have this kutti pisasu as my friend???????????????????????????
அ. வ: "தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?"


Scrap: Hi Dear friend,
           This is Raghu from chennai working as a Soft eng.
           i like to have friendship with u.
           i am expecting ur reply
           take care
           - Raghu
அ. வ: "டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை… இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?"


Scrap: hi vaisu,
           how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
           reply as soon as
           takecare
           bye
அ. வ: "இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?"


Scrap: r u BCCCCCCCCCCCCCCCCCCCC
அ. வ: "ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?"


Scrap: ur name s nice mrs.mosquito bite crazzyyyy…..
அ. வ: "ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா…)"
 


மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா..






Sunday, April 05, 2009

கவிதைகள் ஆயிரம்...


ஊமை

உன் விழியின் வார்த்தைகள் புரியாமல் 
பறந்தேன் விண்ணில்
புரிந்த பின் வீழ்தேன் மண்ணில்
நீ சொன்னாய் ப் ப் ப்பா ப்பா என்று.

------------------------------------------------------------------------------------------

என் நிலைமை

உன் பெயர் தெரியாமல் 
அம்மா என்றேன், தாயே என்றேன் பிட்சை போட்டார்கள்.
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில் 
களை உன் மௌனத்தை இல்லையேல் 
உருக்குலைந்து விடுவேன் நான்.

------------------------------------------------------------------------------------------

மனிதன்

சூழ்நிலைக்கு ஏற்றார் போல்
பேசிய வார்த்தைகள்
கடந்து வந்த காலகட்டங்கள் 
திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?





Friday, April 03, 2009

சும்மா வாங்காதீங்க...


யாரிடமும் எப்போதும் எந்த பொருளையும் இரவலாகவோ, இனாமாகவோ வாங்காதீர்கள்.
அவங்களுக்கு உங்க மேல உள்ள மதிப்ப அது கொரச்சிடும்.

ஒரு தடவை மன்னர் காட்டுக்கு வேட்டைக்கு சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்று சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் கட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்க்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையல்கராத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான்.

என்ன சமாச்சாரம் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியை சொன்னான்.

மன்னர் சமையல் குழுத் தலைவனை கடுமையாக கண்டித்தார். பிறகு தனது வீரர்களில் ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அன்மையில் இருக்கும் கிராமத்திற்கு சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கி வா என உத்தரவிட்டார்.

அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார். என்ன முல்லா எதாவது சொல்ல வேண்டுமா? என்று கேட்டார் மன்னர். ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள் குடிமக்களிடம் உப்பு இனாமாக கேட்க்க வேண்டாம் என்றார் முல்லா.

ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பு இலவசமாக கொடுக்க கூட முடியாத நிலையில் இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியத்தோடு கேட்டார்.  

மன்னர் பெருமானே நான் சொன்னதன் உட் பொருளைத் தாங்கள் விருப்பம் அறிந்தால், மக்கள் ஒரு மூட்டை உப்புகூட இனமாக கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உங்கள் மீது இருக்கும் மரியாதை போய்விடும் என்றார் முல்லா.

ஏன் என்று கேட்டார் மன்னர்.

என்ன காரணத்தால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்கு தெரியாது. உப்பு மிகவும் மலிவான பொருள். பரம ஏழை விட்டிலும் உப்புக்கு பஞ்சமிருக்காது. மன்னரிடம் உப்பு இல்லாமல் இல்லை. உப்பு கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவர் நிலை கேவலமாகிவிட்டது என்று தான் மக்கள் உங்களைப்பற்றி நினைப்பார்கள்.

பின்னர் அவர்கள் உங்களை எவ்வாறு மதிப்பார்கள். அதனால் நமக்குத் தேவையான உப்பினை விலை மதிப்புக்கு அதிகம் பொருளை உப்பு தருபவர்க்கு கொடுத்துவிட்டு உப்பை வாங்கிவரச் சொல்லுங்கள் என்றார் முல்லா.

அவர் சொன்ன தத்துவமும் சரிதான் என்று மன்னருக்கு தோன்றியது. ஆகவே பணம் கொடுத்து உப்பை வாங்கிவருமாறு படை வீரனிடம் உத்தரவிட்டார்.

மன்னருக்கே இந்த நீலை ஏற்படும் என்றால் சாதரண மனிதனின் நிலை?.