Sunday, May 31, 2009

போட்டு வாங்கறது - (கேள்விய போட்டு பதில் வாங்கறாங்க)

என்னை இந்த பதிவிற்கு அழைத்த ரம்யா அவர்களுக்கு நன்றி

என்னமோ திருவிளையாடல் படத்துல வர தருமி மாதிரி நீங்க கேள்வி கேட்கறதும் சொக்கன் மாதிரி நான் பதில் சொல்லறதும் அப்பபா முடியல.  

நாங்கலாம் பரிட்சைல பதில் எழுதுவதை பார்த்து எல்லா வாத்தியாரும் சும்மா புகழ்ந்து தள்ளுவாங்க பாருங்க அப்பப்பா...  

அதே மாதிரி நீங்களும் படிச்சிட்டு சும்மா புகழ்ந்து தள்ளிடுவீங்கன்னு நினைகிறேன். எதுவாக இருந்தாலும் நமக்குள்ள இருக்கேட்டும் வெளியில தெரிய வேண்டாம்.

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அண்ணன் வணங்காமுடி, விஷ்வாமித்திரர் மாதிரி யாருக்காகவும் எதுக்காகவும் தலை குனிவது பிடிக்காது. அதனால வணங்காமுடி. அண்ணன் வாழ்க, அண்ணன் வாழ்க அப்படின்னு சொல்லுவதர்க்ககாக அண்ணன்கறது சும்மா அடை மொழி மாதிரி சேத்துகிட்டேன். சும்மாங்க எதோ தோணிச்சு, என்னக்கு நானே வைத்துக்கொண்டது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
குழந்தையா இருக்கச்ச.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு மட்டும் தான் பிடிக்கும்.வேற யாருக்கும் பிடிக்காது. என்ன கொஞ்சம் அஷ்ட கோணலா இருக்கும். கோழி கிண்டின மாதிரி இருக்குன்னு பாக்கறவங்க எல்லாரும் சொல்லுவாங்க. நாலு பேரு நாலு விதமா சொல்லத்தான செய்வாங்க. எல்லாம் பொறாமை வேற ஒன்னும் இல்ல...

4.பிடித்த மதிய உணவு என்ன?
உணவுன்னு வந்த பிறகு பாரபட்சம் எல்லாம் கிடையாது (காலை, மதியம், பகல், இரவுன்னு). எல்லா நேரமும் எல்லாம் சாப்பிடுவேன். சாப்பிடும் பொருள் எல்லாமே என்னக்கு பிடிக்கும். (நான் சாப்பிடுவதற்காக உயிர் வாழவில்லை. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுகிறேன்.)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
எல்லாருடனும் உடனே நட்பு வைத்துக்கொள்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா... அருவியில் குளிக்க பிடிக்குமா?
பிடிக்கும் ஆனா பிடிக்காது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தை கவனிப்பேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாமே...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எல்லாம் பிடிக்கும். பிடிக்காதுன்னு சொல்லறமாதிரி எதுவும் கிடையாது

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னோட சரி பாதியை தேடிக்கிட்டு இருக்கேங்க...

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
உலக அழகிகள்....

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு Raymond suit போட்டுட்டு இருந்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க. கருப்பு shorts & T-Shirt தாங்க.

12.என்ன பார்த்து // கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
பக்கத்துக்கு வீட்டுக்கு வத்திருக்கும் பொண்ண பாத்துக்கிட்டு. அழகோ கொல்லுதே (வராணம் ஆயிரம்) பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பச்சை நிறம்

14.பிடித்த மணம்?
கூவம் ஆத்து பக்கம் போன வரும் பாருன்ங்க ஒரு மணம் அது தாங்க பிடிக்கும். நாற்றத்தை தவிர நறுமணம் (வாசனை அனைத்தும் பிடிக்கும்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
நிறைய விஷயங்கள் பிடிக்கும் ஆனா அதுக்கு நேரம் போதாது. யாம் பெற்ற பேரு பெருகை இவ்வையகம். அது மாதிரி தாங்க சும்மா எல்லாரையும் ஆட்டத்துல இழுத்துவிட்டு வேடிக்கை பாக்கலாம்னு தான்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?
இவர் குழந்தைகளுக்காக சில கருத்துள்ள கதைகளை சொல்லுவது எனக்கு பிடிக்கும். அது மட்டும் அல்லாது அவர்களது வாழ்கையில் நடந்த நிகழ்வை மற்றவருடன் பகிர்ந்துகொள்வது போன்ற பதிவுகள்.

17. பிடித்த விளையாட்டு?
கிரிகெட், செஸ்ஸ் ஆனா விளையாடதான் நேரம் கிடைக்க மாடீங்குது.

18.கண்ணாடி அணிபவரா?
புட்டியா?. அய்யயோ இல்லைங்க. சும்மா கூலிங் கிளாஸ் போடுவேன்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லாபடமும் பார்பேன். பிடிக்கும்னு தனியா எதுவும் கிடையாது

20.கடைசியாகப் பார்த்த படம்?
தமிழ்: பசங்க.
ஆங்கிலம்: Outlander
ஹிந்தி: Rab Ne Bana Di Jodi
 
21.பிடித்த பருவ காலம் எது?
மனிதனின் மழலைப் பருவ காலம் பிடிக்கும். இயற்கையின் குளிர் பருவ காலம் பிடிக்கும்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
அந்த பழக்கத்த விட்டு ரொம்ப காலம் ஆச்சு. அப்பப்போ குமுதம், குங்குமம், விகடன் புத்தகம் படிபேன்.

23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வாரம் ஒருமுறை நேரம் கிடைக்கும் போது.

24.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
குழந்தையின் மழலை சத்தம். மற்றும் இசைக்கருவியில் இருந்து வரும் அணைத்து சத்தமும் பிடிக்கும். அளவுக்கு மீறிய சத்தம் எதுவும் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
துபாய்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தன்னம்பிக்கை தான் என்னோட திறமைன்னு நான் நினைகிறேன்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம் பண்ணறதை ஏத்துக்க முடியாது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?  
அப்படின்னா?

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?   
கேரளா...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானா இருக்கணும்...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்? 
இனிமேல் தான் யோசிக்கணும் (சின்ன வீடு செட்டப்பன்னலாமா?).

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
எல்லாம் இருக்கறவனுக்கு வாழ்வு. இல்லாதவனுக்கு தாழ்வு

தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைப்ப‌து ???

20 comments:

ஸ்ரீ.... said...

பதில்கள் அருமை.

ஸ்ரீ....

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் ஸ்ரீ.... வருகைக்கு நன்றி. பின்னுட்டதிருக்கு நன்றி

S Senthilvelan said...

//31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
இனிமேல் தான் யோசிக்கணும் (சின்ன வீடு செட்டப்பன்னலாமா?).//

எல்லோருமே ரொம்ப கிளுகிளுப்போட படிக்கிற கேள்வி பதில் இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. ஹாஹா :)

நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க..

www.senthilinpakkangal.blogspot.com

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் S Senthilvelan வருகைக்கு நன்றி. பின்னுட்டதிருக்கு நன்றி.

அண்ணன் வணங்காமுடி said...

S Senthilvelan said...
எல்லோருமே ரொம்ப கிளுகிளுப்போட படிக்கிற கேள்வி பதில் இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. ஹாஹா :)

நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க.. ///

நன்றி. கண்டிப்பாக

RAMYA said...

//
போட்டு வாங்கறது - (கேள்விய போட்டு பதில் வாங்கறாங்க)
//

ஓ இதுதான் அதுவா??

RAMYA said...

//
என்னமோ திருவிளையாடல் படத்துல வர தருமி மாதிரி நீங்க கேள்வி கேட்கறதும் சொக்கன் மாதிரி நான் பதில் சொல்லறதும் அப்பபா முடியல.
//

சொல்லுங்க சொல்லுங்க நல்லா சொல்லுங்க.

இப்போ உங்களைப் பார்த்தால் தருமிமாதிரியேதான் இருக்கு :-)

RAMYA said...

//
நாங்கலாம் பரிட்சைல பதில் எழுதுவதை பார்த்து எல்லா வாத்தியாரும் சும்மா புகழ்ந்து தள்ளுவாங்க பாருங்க அப்பப்பா...
//

நம்பிட்டோமில்லே :-)

RAMYA said...

//
அதே மாதிரி நீங்களும் படிச்சிட்டு சும்மா புகழ்ந்து தள்ளிடுவீங்கன்னு நினைகிறேன். எதுவாக இருந்தாலும் நமக்குள்ள இருக்கேட்டும் வெளியில தெரிய வேண்டாம்.
//

உஷ்! சத்தம் போட்டு பேசாதீங்க, நான் யாருகிட்டேயும் சொல்லலை
அமைதி அமைதி :-)

RAMYA said...

//
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

அண்ணன் வணங்காமுடி, விஷ்வாமித்திரர் மாதிரி யாருக்காகவும் எதுக்காகவும் தலை குனிவது பிடிக்காது. அதனால வணங்காமுடி. அண்ணன் வாழ்க, அண்ணன் வாழ்க அப்படின்னு சொல்லுவதர்க்ககாக அண்ணன்கறது சும்மா அடை மொழி மாதிரி சேத்துகிட்டேன். சும்மாங்க எதோ தோணிச்சு, என்னக்கு நானே வைத்துக்கொண்டது.
//

அருமை நல்ல புத்திசாலித்தனமான பெயர் சூட்டுதல் அதுவும் தனக்குத்தானே :-)

RAMYA said...

//
2..கடைசியாக அழுதது எப்பொழுது?
குழந்தையா இருக்கச்ச.
//

அட இங்கே பாருய்யா குழந்தையா இருந்தபோது அழுதாராம் அம்மா உட்வைஸ் கிரைப் வாட்டர் கொடுத்தாங்களா?

சொல்லவே இல்லை :-)

RAMYA said...

//
3..உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு மட்டும் தான் பிடிக்கும்.வேற யாருக்கும் பிடிக்காது. என்ன கொஞ்சம் அஷ்ட கோணலா இருக்கும். கோழி கிண்டின மாதிரி இருக்குன்னு பாக்கறவங்க எல்லாரும் சொல்லுவாங்க. நாலு பேரு நாலு விதமா சொல்லத்தான செய்வாங்க. எல்லாம் பொறாமை வேற ஒன்னும் இல்ல...
//

இல்லே! இல்லே! நாங்க இன்னிமே பொறாமைப் படமாட்டோம் :-)

RAMYA said...

//
4.பிடித்த மதிய உணவு என்ன?
உணவுன்னு வந்த பிறகு பாரபட்சம் எல்லாம் கிடையாது (காலை, மதியம், பகல், இரவுன்னு). எல்லா நேரமும் எல்லாம் சாப்பிடுவேன். சாப்பிடும் பொருள் எல்லாமே என்னக்கு பிடிக்கும். (நான் சாப்பிடுவதற்காக உயிர் வாழவில்லை. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுகிறேன்.)
//

உண்மையை அப்படியே சொல்லி இருக்கீங்க போல!

RAMYA said...

//
16..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?
இவர் குழந்தைகளுக்காக சில கருத்துள்ள கதைகளை சொல்லுவது எனக்கு பிடிக்கும். அது மட்டும் அல்லாது அவர்களது வாழ்கையில் நடந்த நிகழ்வை மற்றவருடன் பகிர்ந்துகொள்வது போன்ற பதிவுகள்.
//

நன்றி அண்ணன் வணங்காமுடி!!

RAMYA said...

//
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
இனிமேல் தான் யோசிக்கணும் (சின்ன வீடு செட்டப்பன்னலாமா?).
//

அதுசரி இதெல்லாம் வேறேயா?? ஒரு பக்கம் வாங்கற அடி போதாதா :-)

RAMYA said...

//
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

எல்லாம் இருக்கறவனுக்கு வாழ்வு. இல்லாதவனுக்கு தாழ்வு
//

அருமை அருமை நல்ல பதில்!

RAMYA said...

அனைத்து பதில்களும் மிகவும் சிறப்பாகவும், இளமை துள்ளலோடும் இருந்தது.

நல்ல பதில்கள்.

அழைத்தவர்கள் அனைவருக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்.

அண்ணன் வணங்காமுடி said...

RAMYA said...
//
2..கடைசியாக அழுதது எப்பொழுது?
குழந்தையா இருக்கச்ச.
//

அட இங்கே பாருய்யா குழந்தையா இருந்தபோது அழுதாராம் அம்மா உட்வைஸ் கிரைப் வாட்டர் கொடுத்தாங்களா? //

குவாட் கொடுத்தாங்க...

விஷ்ணு. said...

//எல்லாம் இருக்கறவனுக்கு வாழ்வு. இல்லாதவனுக்கு தாழ்வு//

ஒத்த வார்த்தை சென்னாலும் சுத்த வார்த்தையா இருக்கு.

பழமைபேசி said...

//18.கண்ணாடி அணிபவரா?
புட்டியா?. அய்யயோ இல்லைங்க.//

அய்யய்யோ, அல்லங்க என்பதே சரி!