Tuesday, November 25, 2008

தாய்மை


தாய்!
******
உன்னை கழுத்து நிறைய நகைகளோடு கட்டிக் கொடுத்தார்களாம்; 
புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன்! 
நாங்கள் படிப்பதற்கு  ஒரு நகை குறைந்தது; 
அப்பாவுக்கு தொழில் கஷ்டம் இன்னொரு நகை குறைந்தது; 
அக்காவுக்கு திருமணம் மொத்த நகையும் போனது; 
உனக்கு தாலிக்கயிறு தான் மிச்சம்! 
இன்னமும் நீ மாறாத அதே புன்னகையுடன்... 
புகைப்படத்தில் பார்த்தது போல! 

தாய்மை பாரம் அறியாது.

அம்மா
********
குழந்தை
ப் பருவந்தொட்டே தொட்டதெற்கெல்லாம்
அம்மாவிடம் அடிவாங்கியே வளர்ந்து வந்தவன்...
பென்சில் தின்றதற்காக இடக்கையிலே சூடுபட்டது
உற்றுநோக்கினால் இன்றும் தெரியும்!
இன்று அதே அம்மா என் குழந்தையோடு குழந்தையாக...
கண்ணில் கண்ணீர்வர கொஞ்சிக் கொஞ்சிச் சிரிக்கிறாள்!
சாக்பீஸ் தின்றாலும சோற்றைக் கொட்டினாலும்
அதட்டாமல் திருத்துகிறாள்! 
கை சூப்பச் சொல்லி வேடிக்கை பார்க்கிறாள்!
எனக்கும் வேடிக்கையாக இருக்குது...
இத்தனை நாளாய் இந்த மனதை 
எங்கே ஒளித்திருந்தாய்?

தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோடு இருக்க 
நீ கோயில் தேடி அலைவது எதற்கு.

1 comment:

RAMYA said...

//
தாய்மை பாரம் அறியாது.
---------------------------------
தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோடு இருக்க நீ கோயில் தேடி அலைவது எதற்கு.
//

உண்மைதானுங்கோ, உங்களுக்கு புரியுது...........