Saturday, December 13, 2008

வெற்றயின் ரகசியம் - (துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்)


ஒரு கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தான். அதற்கு அவன் சிறு சிறு முயற்சிகளை மேற் கொண்டான். இருந்தாலும் அவனால் முழுமையாக வெற்றி பெற இயலவில்லை.

ஒரு நாள் அந்த கிராமத்திற்கு மகான் ஒருவர் வந்தார். அந்த மகான் கிராம மக்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறினார். அவரிடம் அந்த இளைஞன் சென்று வெற்றிக்கான ரகசியம் என்ன என்று கேட்டான். அதற்க்கு அந்த மகான் மறு நாள் காலை நதிக்கரைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு சொன்னார். அவனும் மறு நாள் காலை நதிக்கரைக்கு சென்று மகானை சந்தித்தான். 

அந்த மகான் அவனை கழுத்து முங்கும் வரை நதிக்குள் அழைத்து சென்றார். அதன் பிறகு சற்றும் எதிபாராத விதமாக இளைஞனின் தலையை பிடித்து தண்ணீருக்குள் முக்கினார். சிறிது நேரத்தில் அவனால் தண்ணீருக்குள் இருக்க முடியவில்லை. அவன் மிகவும் தத்தளித்தான். இரண்டு மணித்துளிக்கு பிறகு அவர் அவனை நீரில் இருந்து வெளியே எடுத்தார். 

அப்போது அவர் அவனை பார்த்து நீ தண்ணீருக்குள் இருந்த போது உனக்கு என்ன தேவை பட்டது என்றார். சற்றும் தயங்காமல் காற்று என்றான். அதற்க்கு அவர் நீ தண்ணீரில் இருக்கும் போது உனக்கு காற்று எப்படி தேவைப்பட்டதோ அது போன்று, வெற்றி உனக்கு எப்போது உயிர் மூட்சாக விளங்குகிறதோ அப்போது தான் நீ வெற்றியை பெறமுடியும் என்று கூறினார்.

இக்கருத்து அவனுல் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மிகவும் கடினமாக உழைத்து வெற்றிகளை குவித்தான். உங்கள் அனைவருக்கும் இந்த கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துக்களை பதியவும்

9 comments:

தமிழ் அமுதன் said...

குட் நல்லா இருக்கு!
இன்னும் இதுபோல நெறைய வேணும்
எழுதுங்க வாழ்த்துக்கள்!

அண்ணன் வணங்காமுடி said...

//
குட் நல்லா இருக்கு!
இன்னும் இதுபோல நெறைய வேணும்
எழுதுங்க வாழ்த்துக்கள்!

//
முதல் கருத்துக்கு நன்றி..
எனது பயணம் தொடரும்...
உங்கள் கருத்துகளை தொடர்ந்து பதியவும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தத்துவக்கதை நல்லாவே இருந்த்து.

நிறைய எழுதுங்கள்.

Anonymous said...

nice story keep writing

அண்ணன் வணங்காமுடி said...

//
தத்துவக்கதை நல்லாவே இருந்த்து.

நிறைய எழுதுங்கள்.

//

கண்டிப்பாக உங்கள் ஆசை நிறைவேற்றப்படும்

நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய
நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய
நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய

போதுமா... நன்றி!

அண்ணன் வணங்காமுடி said...

//
nice story keep writing

//
thank you very much

தமிழ் தோழி said...

நல்ல பதிவு.

Natchathraa said...

All your postings are too good....

a message at the end of ur postings add more value to it...

Keep writing.....

anbudan vaalu said...

பயனுள்ள பதிவு.....