Monday, March 23, 2009

என்னைக்கவர்ந்தவர்...



என்னைக் கவர்ந்தவர் பற்றி "ரம்யா" அக்கா அவர்கள் தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார். அவரின் அன்பான அழைப்பை ஏற்று இந்த பதிவு.

நான் சிறுவயதில் இருந்தே இவரின் பெருமையை கேட்டும் கண்டும் வந்திருக்கிறேன். இவர் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் புகழ்ந்து பாராட்டும் பெருமைக்குரிய மனிதர்.



தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் தீவில் ஒரு நடுத்தர இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் இவர்.

இவர் சுய விவரம்:
பெயர்: டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
பிறப்பு: 15 அக்டோபர் 1931.
தந்தையின் பெயர் : ஜைனுல்லாபுதீன்.
தாயின் பெயர் : ஆஷியம்மா.
சகோதரி : ஜொகாரா ஜலாலுதின்.
சிறு வயது நண்பர்கள்: ராமநாத சாஸ்த்ரிகள், அரவிந்தன், சிவப்பிரகாசம்.

இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர் இவர் (25 ஜூலை 2002).

விருதுகள்:
30 பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இவருக்கு டாக்டர் பட்ட
ம் வழங்கியுள்ளது.
பத்ம புஷன் (1981) 
பத்ம விபுஷன் (1990) 
பரத் ரத்னா (1997)
இன்னும் பல பல..........

இவரது சுயசரிதம் - 
அக்னிச் சிறகுகள் என்ற பெயரில் தமிழிலும். (Wings of Fire) என்ற பெயரில் ஆங்கிலத்திலும் 
வெளியானது. இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது 
குறிப்பிடத்தக்கது.

பல புத்தகங்கள் இவர் எழுதியும் பலர் இவர் பற்றி எழுதியும் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகலம் எஸ் எல் வி - 3 திட்டத்திலும், அக்னி திட்டத்திலும் அவரது முழு திறமையும் நாட்டு முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினார்.


நமது தாயகத்தின் பெருமையை தலைநிமிரச் செய்த மேதை.

நாட்டின் பாதுகாப்பிற்காக வானத்தில் வேலி கட்டியவர்.

சோதனைகளிலும் சாதனை படைத்தவர்.

கடலோர படகுக்காரர் மகன் கடலளவு விரிந்து வானளவு உயர்ந்தவர்.

விண்வெளி, பாதுகாப்புதுறை ஆராய்ச்சி, அணுசக்தி என்ற மூன்று துறையிலும் தேர்ந்தவர்.

இந்தியாவின் குடியரசுத்தலைவராய் பணியாற்றியவர்.

அவரது வார்த்தைகள் சில:

நீங்கள், நான், இந்த பூமியில் உள்ள நாம் அனைவருமே இறைவனால் அனுப்பப்பட்டிருக்கிறோம். நமக்குள்ளே இருக்கும் அனைத்து ஆக்கத்திறன், வளங்களையும், பயன்படுத்திக்கொண்டு மனசாட்சிக்கு பணிந்து அமைதியாக வாழ்வதற்க்காக அவன் நம்மை படைத்திருக்கிறான்.

நமது வாய்ப்புகளை தெரிவு செய்வதிலும், நமது தலை விதியை உருவாக்கிக் கொள்வதிலும் தான் நாம் வேறுபடுகிறோம். வாழ்க்கை ஒரு சிக்கலான ஆட்டம்! ஒரு மனிதனாக வாழ்வதற்க்கான உங்களுடைய பிறப்புரிமையை தக்க வைத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே உங்களால் அதில் வெற்றி பெற முடியும்.

இந்த உரிமையை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். எந்த விஷயத்தையுமே இப்படிதான் செய்தாக வேண்டும் என்று மற்றவர்கள் நிர்பந்தத்தை, புறக்கணிக்கும் மன உறுதி உங்களுக்கு வேண்டும். ஒரு துறையில் ஈடுபடும்போது எப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையிலும் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதை புரிந்து அதற்கேற்றாற்போல் செயல் பட வேண்டும்.

இவரது குறிக்கோள் 2020 இந்தியா வல்லரசு நாடாகும் என்பது.

இவரது இணையத்தளம்: http://www.abdulkalam.nic.in

இந்த பதிவு பற்றி உங்கள் கருத்துக்களை எழுதவும்...

12 comments:

நசரேயன் said...

நல்ல பகிர்வு

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான பகிர்வு. நன்றி அண்ணன் வணங்காமுடி அவர்களே..

Ungalranga said...

//எந்த விஷயத்தையுமே இப்படிதான் செய்தாக வேண்டும் என்று மற்றவர்கள் நிர்பந்தத்தை, புறக்கணிக்கும் மன உறுதி உங்களுக்கு வேண்டும்//

அதைதானே பண்ணிட்டு இருக்கோம்..

நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்.

RAMYA said...

அழைப்பை ஏற்று மிக அருமையான பதிவை கொடுத்து இருக்கிறீர்கள் தம்பி

தாமதாமா பதிவு போடுவீங்கன்னு நினைச்சேன், ஆனால் விரைவில் நச்சுன்னு ஒரு பதிவு.

உங்களை கவர்ந்தவரிகள் என்ற தலைப்பில் நீங்க கொடுத்திருக்கும் மா மேதையை உங்களைப் போலவே நானும் பலதடவை ரசித்திருக்கின்றேன்.

அவர்கள் சாதனைகள் அனைத்தும் ரசனைகளுக்கு எல்லாம் அப்பார் பட்டவைகள்.

பிடித்தவர்களை பகிர்ந்து கொள்வது என்பது மிகப் பெரிய விஷயம், அதிலும் திரு.கலாம் பற்றி மிக அருமை என்ற ஒரு சொல் போதாது.

அவரின் கனவுகளை அவைவரும் நிறைவேற்ற பாடு படுவதுதான் நமது தலையாய கடமையாக எண்ண வேண்டும்.

எனது அழைப்பை ஏற்று அருமையான பதிவை போட்ட அண்ணன் வணங்காமுடி அவர்களுக்கு மிக்க நன்றி.

அப்பாவி முரு said...

//நமது வாய்ப்புகளை தெரிவு செய்வதிலும், நமது தலை விதியை உருவாக்கிக் கொள்வதிலும் தான் நாம் வேறுபடுகிறோம்//

நம் தலைவிதியை நாம் தான் நிர்ணயிக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

RAMYA said...

//
நமது வாய்ப்புகளை தெரிவு செய்வதிலும், நமது தலை விதியை உருவாக்கிக் கொள்வதிலும் தான் நாம் வேறுபடுகிறோம். வாழ்க்கை ஒரு சிக்கலான ஆட்டம்! ஒரு மனிதனாக வாழ்வதற்க்கான உங்களுடைய பிறப்புரிமையை தக்க வைத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே உங்களால் அதில் வெற்றி பெற முடியும்.
//


என்ன ஒரு தீர்க்கமான, கருத்துச் செறிவான அறிவுரை பாருங்கள்.
ஆமாம் நமது வாழ்க்கை ஒரு ஆட்டம் என்கிறார்.

சிந்தித்தால் அதன் உண்மை புரியும்.

விமர்சனங்களுக்கு அப்பார் பட்ட ஒரு கதாநாயகன் திரு.கலாம் அவர்கள்.

மறுபடியும் அருமையான பகிர்தலுக்கு நன்றி!! அண்ணன் வணங்காமுடி அவர்களே!!

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் நசரேயன்
வாருங்கள் இராகவன்
வாருங்கள் ரங்கன்
வாருங்கள் ரம்யா
வாருங்கள் முரு

அண்ணன் வணங்காமுடி said...

அனைவரது வருகைக்கும் நன்றி...

தேவன் மாயம் said...

உண்மையில் பெரிய அரிவாளிதான்!

தேவன் மாயம் said...

அழைப்பை ஏற்று மிக அருமையான பதிவை கொடுத்து இருக்கிறீர்கள் தம்பி///

அண்ணன் வணங்கமுடிம்மா!!

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் தேவன்மயம்

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு! நல்ல பகிர்வு!