Friday, April 03, 2009

சும்மா வாங்காதீங்க...


யாரிடமும் எப்போதும் எந்த பொருளையும் இரவலாகவோ, இனாமாகவோ வாங்காதீர்கள்.
அவங்களுக்கு உங்க மேல உள்ள மதிப்ப அது கொரச்சிடும்.

ஒரு தடவை மன்னர் காட்டுக்கு வேட்டைக்கு சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்று சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் கட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்க்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையல்கராத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான்.

என்ன சமாச்சாரம் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியை சொன்னான்.

மன்னர் சமையல் குழுத் தலைவனை கடுமையாக கண்டித்தார். பிறகு தனது வீரர்களில் ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அன்மையில் இருக்கும் கிராமத்திற்கு சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கி வா என உத்தரவிட்டார்.

அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார். என்ன முல்லா எதாவது சொல்ல வேண்டுமா? என்று கேட்டார் மன்னர். ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள் குடிமக்களிடம் உப்பு இனாமாக கேட்க்க வேண்டாம் என்றார் முல்லா.

ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பு இலவசமாக கொடுக்க கூட முடியாத நிலையில் இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியத்தோடு கேட்டார்.  

மன்னர் பெருமானே நான் சொன்னதன் உட் பொருளைத் தாங்கள் விருப்பம் அறிந்தால், மக்கள் ஒரு மூட்டை உப்புகூட இனமாக கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உங்கள் மீது இருக்கும் மரியாதை போய்விடும் என்றார் முல்லா.

ஏன் என்று கேட்டார் மன்னர்.

என்ன காரணத்தால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்கு தெரியாது. உப்பு மிகவும் மலிவான பொருள். பரம ஏழை விட்டிலும் உப்புக்கு பஞ்சமிருக்காது. மன்னரிடம் உப்பு இல்லாமல் இல்லை. உப்பு கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவர் நிலை கேவலமாகிவிட்டது என்று தான் மக்கள் உங்களைப்பற்றி நினைப்பார்கள்.

பின்னர் அவர்கள் உங்களை எவ்வாறு மதிப்பார்கள். அதனால் நமக்குத் தேவையான உப்பினை விலை மதிப்புக்கு அதிகம் பொருளை உப்பு தருபவர்க்கு கொடுத்துவிட்டு உப்பை வாங்கிவரச் சொல்லுங்கள் என்றார் முல்லா.

அவர் சொன்ன தத்துவமும் சரிதான் என்று மன்னருக்கு தோன்றியது. ஆகவே பணம் கொடுத்து உப்பை வாங்கிவருமாறு படை வீரனிடம் உத்தரவிட்டார்.

மன்னருக்கே இந்த நீலை ஏற்படும் என்றால் சாதரண மனிதனின் நிலை?.

5 comments:

நட்புடன் ஜமால் said...

யாரிடமும் எப்போதும் எந்த பொருளையும் இரவலாகவோ, இனாமாகவோ வாங்காதீர்கள்\\

சரியா சொன்னீங்க

ஆனாலும் எனக்கு ரொம்ப கஷ்ட்டம் தான்

முயலுவோம் ...

நட்புடன் ஜமால் said...

\\மன்னருக்கே இந்த நீலை ஏற்படும் என்றால் சாதரண மனிதனின் நிலை?. \\

சிந்திக்க வைத்து விட்டீர்கள்

இராகவன் நைஜிரியா said...

சரியாகச் சொன்னீர்கள் வணங்காமுடி அவர்களே..

Nothing is free in this world. இதுதான் சத்தியமான உண்மை. (அனுபவமும் கூட)

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் ஜமால், இராகவன்

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
சரியாகச் சொன்னீர்கள் வணங்காமுடி அவர்களே..

Nothing is free in this world. இதுதான் சத்தியமான உண்மை. (அனுபவமும் கூட) //

அப்படி என்ன அனுபவம்க