Wednesday, May 06, 2009

காலண்டர் கருத்துக்கள்


மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன...

தெளிவான குறிக்கோளே வெற்றியின் ஆரம்பம்.

லட்சியம் இல்லாத வாழ்க்கை எண்ணை இல்லா விளக்குக்கு சமம்.

உண்மையான ஆலயம் இதயத்தில் தான் அமைந்துள்ளது.

தயங்குவது என்பது தோல்விக்கு அடையாளம் ஆகும். 

உனக்காக பொய் சொல்பவன். உனக்கு எதிராகவும் பொய் சொல்வான். 

கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளை இடுதலையும் அறிவான்.

நல்லவனை பிறப்பது சந்தர்ப்பத்தினால், நல்லவனாக வாழ்வது முயற்சியினால்.

அதிகாரத்தை வெல்வது அன்பு. பயத்தை வெல்வது துணிவு.

இன்பத்தில் உண்டாவது மறதி. துன்பத்தில் உண்டாவது உறுதி.

பொறுமையும் தன்னடக்கமும் வாழ்வின் பிற்பகுதியை வெற்றியாக்கும்.

தோல்வியடைவது குற்றமில்லை முயற்சி இல்லாத வாழ்வு குற்றமுடையது.

ஏக்கமும், தூக்கமும் ஊக்கத்தை கெடுக்கும்.

வேலை செய்ய நேரம் எடுத்துக்கொள் அது வெற்றியின் விலை.

தோல்வி மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை உள்ளத்தில் நுழையவே இடம் தரக்கூடாது.

ஏராளமான வாய்புகள் வரும்போது எச்சரிக்கையாய் இரு.

தோல்வியில் இறக்கம் கூடாது. வெற்றியில் கர்வம் கூடாது.

தனக்கு மட்டும் நல்லவனாக இருப்பவன் எதற்கும் பயன் பட மாட்டான்.

ஒரு நிமிட கோவம் ஓராயிரம் வருட புகழை அழித்துவிடும்.

ஏளனம் என்பது குறுகிய உள்ளத்தில் இருந்து எழுகிற நச்சு புகை.

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல சிந்தனைகள்

RAMYA said...

தீர்க்கமான, சிந்திக்க வைக்கும் முத்தான கருத்துக்கள்.

அருமை, நல்ல எழுத்து நடை, பாராட்டுக்கள்!!

RAMYA said...

சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள்!!

Vishnu - விஷ்ணு said...

நல்ல சிந்தனையை தூண்டும் கருத்துக்கள். அது சரி ஏன் திடிர்னு இப்படி கிளம்பியாச்சு

அண்ணன் வணங்காமுடி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்
வருகைக்கு நன்றி ரம்யா
வருகைக்கு நன்றி விஷ்ணு

mubaraktamil said...

GOOG NEWS